அறிமுகம்

My photo
அனுப்பர்பாளையம் - திருப்பூர், தமிழ்நாடு, India

Saturday, June 13, 2009

கோவிலா / பொழுது போக்கு பூங்காவா?

கோவிலா / பொழுது போக்கு பூங்காவா?

சமீபத்தில் வேலூர் அருகே உள்ள ஸ்ரீ புறம் கோவிலுக்கு சென்று இருந்தேன். கார் நிறுத்தும் இடம் முதல கர்ப்ப கிரகம் வரை கோவில் என்ற உணர்வே இல்லை. ஒரு பொழுது போக்கும் இடமாகவே காட்சி அளித்தது. தாமரை போல் இதழ்கள் போல் இவ்வாலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
ஆலய (?) தொடக்கம் முதல் கர்ப்ப கிரகம் வரை இவ்வாலய நிறுவனர் [ அம்மா என்று அழைக்கிறார்கள்] படங்கள் பெரிதாக காட்சி அளிக்கிறது. வேடிக்கையான விசயம் என்ன என்றால், கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள மஹா லக்ஷ்மி சிலையை விட நிறுவனர் படம் பெரிதாக தெரிகிறது.
திரைப்பட அரங்குகளில் உள்ளது போல தின்பண்டங்களும் தண்ணீர் புட்டிகளும் அதிக விலைக்கு விற்கபடுகின்றன. சும்மாவா! 400 கோடி திரும்ப எடுக்க வேண்டாம்?
அதற்கும் மேல், திருப்பதிக்கு செல்வோர் இங்கு வந்தால் அவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்ற செய்தியை வேறு பரப்பி விடுகிறார்கள். நம் மக்களை பற்றி சொல்லவா வேண்டும்? எவ்வளவு காலம் மாறினாலும் நம் மக்களின் ஏமாறும் குணம் மாறவில்லை. சுய உழைப்பின்றி எளிதாக பணக்காரர் ஆகா வேண்டும் என்ற பேராசை! அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்களோ இல்லையோ அவர்கள் நம்புகிறவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்!!!
ஒரு நாள் முழுதும் பொழுது போக வேண்டும் என்று நினைபவர்கள், நிறைய பணம் இருந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம்!

No comments: