அறிமுகம்

My photo
அனுப்பர்பாளையம் - திருப்பூர், தமிழ்நாடு, India

Tuesday, November 3, 2015



Copied from Blog

'அப்'பெடுத்து அப்பிக்கோ!

ஒருவர் என்னிடம் கேட்டார்.

"நண்பா.. இந்த இணையவழி பொருள் விற்பனையாளர்கள் நேரடியாக வாங்குபவர்களுக்கு சலுகைகள் தராமல், அவர்களுடைய 'அப்'பை திறன்பேசியில் நிறுவி அதன் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் எல்லா சலுகைகளையும் தருகிறார்கள்?  ஏன்?"

இது நல்ல கேள்வி. மில்லியன் டாலர் கேள்வி என்றுகூட சொல்லலாம். அவர் கேள்வியை எளிதாக கேட்டுவிட்டார். ஆனால் சரியான, அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் கிடைப்பதுதான் கடினம்.

ஆமாம். இணையவழியில் பொருட்களை வாங்கவேண்டுமென்றால் 'இணைய உலவி' (browser) வழியாக வாங்கலாமே.

மேசைக்கணினியில் உலவி இருக்கிறது. மடிக்கணினியில் உலவி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் திறன்பேசியிலேயே உலவி இருக்கிறது.

உலவி வழியாக வாங்கினாலும், அப் வழியாக வாங்கினாலும் காசு கொடுத்துத்தான் வாங்கப்போகிறோம்.  பின் ஏன் அப் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் சலுகை?

விமான நிலையம் போகவேண்டும். கார் வேண்டும் என்று சேவை நிறுவனத்தை தொலைபேசி வழியாக அழைத்தால், "ஐயா, அப் வழியாக கேளுங்கள். கிடைக்கும்" என்று மறைமுகமாக அப் நிறுவும் நிர்ப்பந்தத்தை உருவாக்கும் பதில் வருகிறது.

'அப்' வழியாக வருபவர்களுக்கு இணைய வழியாக வருபவர்களைவிட 10,15 நிமிடங்களுக்கு முன்னாலேயே சலுகைவிலை கொடுக்கப்படும்/ அப் வழியாக வாங்கினால் சில சதவீதம் மேலும் சலுகை விலை என்று மறைமுகமாக அப் நிறுவ நிர்ப்பந்தம்.

'அப்' நிறுவினால் முதல் சவாரி இலவசம்/ சில பண நோட்டுகள் கிரெடிட் என்று ஆசை காட்டப்படுகிறது.

'அப்' நிறுவினால் குலுக்கலில் ஒரு படி உயர்விலை உலோகம்/ மதிப்புமிக்க பரிசுகள் /கேஷ்பேக் இப்படியெல்லாம்கூட ஆசை காட்டப்படுகிறது.

சில இணைய விற்பனையாளர்கள் 'அப்' நிறுவினால்தான் எங்கள் சேவை கிடைக்கும் (App only sale). அதன் நிறுவ இயலாதவர்கள்/ விருப்பமில்லாதவர்கள் பணம் படைத்தவர்களேயானாலும் எங்கள் வாடிக்கையாளராக தேவையில்லை. இப்படியும் ஒரு நிலைப்பாடு.

மேலோட்டமாக யோசித்துப்பார்த்தால், ஒரு நிறுவனத்தின் அப் நிறுவல்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் தன் ஆரோக்கியத்தின் அளவுகோலாக  நினைக்கலாம். அந்த எண்ணிக்கையை காட்டி மேலும் நிதி ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கலாம்.  அப் நிறுவிய வாடிக்கையாளர்கள் அடிக்கடி பொருள் வாங்க வசதியாக இருக்கும் என்றும் சொல்லலாம்.
 

அப்படியே இருக்கட்டும்.

இருந்தாலும் ஏதோ ஒன்று நெருடுகிறதா இல்லையா?

"என் பொருளை வாங்குகிறீர்களோ, இல்லையோ. முதலில் 'எங்கள் அப்பை' நிறுவுங்கள்" என்பதுதான் அவர்கள் வெளிநோக்கமோ என்று தோன்றுகிறது.  ஏன் அப்படி பெருங்குரலெடுத்து ஓலமிடுகிறார்கள்?

காலை எழுந்ததிலிருந்து படுக்கப்போகும்வரை எல்லா திசைகளிலிருந்தும் 'எங்கள் அப்பை நிறுவுங்கள்' என்று ஒரே அன்புத்தொல்லை. இன்னும் போகப்போக இந்த அன்புத்தொல்லை அதிகமாக வாய்ப்பிருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை.

நாம் அப் நிறுவிக்கொள்வதில் அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

அந்த கேள்விக்கு பதில் அந்தந்த 'அப்' நிறுவப்படும்போது அது உங்களிடம் கேட்கும் list of permission-களில் மறைந்திருக்கலாம்.  அந்த permission-களை பொறுமையாக படித்துப்பார்த்தால் அந்தக் கேள்விக்கு பதில் தெரியவரலாம்.

நம்மில் எத்தனை பேர் அந்த permission-களை படித்திருக்கிறோம்.

படிக்காமல் accept கொடுப்பவர்கள்தானே அதிகம்.

அது போதாதா 'அவர்களுக்கு'?

No comments: